இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மாசு மற்றும் மன அழுத்தம் காரணமாக முடி உதிர்தல், பொடுகு, வழுக்கை மற்றும் இளநரை போன்ற பிரச்சனைகள் சர்வசாதாரணமாகிவிட்டன. இவற்றுக்குத் தீர்வு காண இரசாயனப் பொருட்களை நாடுவதை விட, வீட்டில் உள்ள இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினாலே நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இதோ முடி வளர்ச்சியை இருமடங்கு அதிகரிக்க இரண்டு எளிய வழிகள்:
முதலாவதாக கற்றாழை: கற்றாழை ஜெல்லை எடுத்து உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அரை மணி நேரம் ஊறவிட்டு, வெதுவெதுப்பான நீரில் மென்மையான ஷாம்பு கொண்டு அலச வேண்டும். இது மயிர்கால்களை வலுப்படுத்தி, முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
இரண்டாவதாக வெந்தயம்: வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் மைய அரைத்துத் தலையில் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அலசினால், வெந்தயத்தில் உள்ள ‘லிசித்தின்’ (Lecithin) என்ற சத்து வேர்க்கால்களை உறுதிப்படுத்தி, முடி உடைவதைத் தடுத்து வளர்ச்சியைத் தூண்டும். இந்த எளிய முறைகளைத் தொடர்ந்து செய்தால் கேசம் பொலிவு பெறும்…
