நேற்று நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 9-ன் பிரம்மாண்ட இறுதிப்போட்டியில், வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த திவ்யா கணேஷ் டைட்டில் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிச்சுற்றில் சபரி, விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா ஆகியோருடன் கடும் போட்டி நிலவிய நிலையில், மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று திவ்யா முதலிடம் பிடித்தார். சபரி இரண்டாவது இடத்தையும், விக்ரம் மற்றும் அரோரா முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களையும் பிடித்தனர்.
வெற்றியாளரான திவ்யா கணேஷுக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதுதவிர, நிகழ்ச்சியின் ஸ்பான்சரான மாருதி சுஸுகி நிறுவனம், ரூ.25 லட்சம் மதிப்புள்ள புதிய ‘விக்டோரிஸ்’ (Victoris) காரை அவருக்கு சர்ப்ரைஸ் பரிசாக வழங்கியது.
வைல்ட் கார்ட் மூலம் உள்ளே நுழைந்து 77 நாட்கள் வீட்டில் இருந்த திவ்யாவுக்கு, ஒரு நாளைக்கு ரூ.30,000 சம்பளம் பேசப்பட்டதாகத் தெரிகிறது. அதன்படி சம்பளம் மற்றும் பரிசுத்தொகை என மொத்தம் ரூ.70 லட்சத்திற்கும் மேல் அவர் சம்பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது…
