Home சினிமா விஜய்யின் படத்திற்கு புதிய சிக்கல் ..!! அமேசான் விடுத்த கெடு..!!

விஜய்யின் படத்திற்கு புதிய சிக்கல் ..!! அமேசான் விடுத்த கெடு..!!

தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்தடுத்து சோதனைகளைச் சந்தித்து வருகிறது. ஏற்கனவே டெல்லி வரை சென்று விசாரணைப் பிரச்சனைகளை எதிர்கொண்ட நிலையில், தற்போது அமேசான் நிறுவனம் மூலம் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.இப்படத்தின் ஓடிடி (OTT) உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என அமேசான் தரப்பு தயாரிப்பு நிறுவனத்திற்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஒருவேளை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாவிட்டால், ஒப்பந்தப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமேசான் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,

“ரிலீஸ் செய்தியை விரைவில் அறிவிக்கவில்லை என்றால், அமேசான் தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சூழல் உள்ளது” எனத் தனது வாதத்தை முன்வைத்தார். ஒரு பிரச்சனை ஓய்வதற்குள் அடுத்த பிரச்சனை தலைதூக்கியுள்ளதால் படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்…

Exit mobile version