Home அரசியல் அரசியலில் பூகம்பம்! திடீரென எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம்.. காரணம் என்ன?

அரசியலில் பூகம்பம்! திடீரென எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம்.. காரணம் என்ன?

தமிழக அரசியல் களத்தில் இன்று ஒரு முக்கிய திருப்பமாக, ஓபிஎஸ் (OPS) அணியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த வைத்திலிங்கம், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு. அப்பாவு அவர்களை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை சபாநாயகரிடம் அவர் வழங்கினார்.

முன்னாள் அமைச்சராகவும், ஓபிஎஸ் அணியின் முக்கியத் தூணாகவும் செயல்பட்டு வரும் வைத்திலிங்கம் அவர்களின் இந்தத் திடீர் ராஜினாமா முடிவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Exit mobile version