Home அரசியல் எம்.பி-க்களுக்கு செக் வைத்த சபாநாயகர்! இனி ‘அங்கே’ உட்கார்ந்தால் மட்டுமே சம்பளம்?

எம்.பி-க்களுக்கு செக் வைத்த சபாநாயகர்! இனி ‘அங்கே’ உட்கார்ந்தால் மட்டுமே சம்பளம்?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வகையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இனிவரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல், உறுப்பினர்கள் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்தால் மட்டுமே வருகைப் பதிவை (Attendance) மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவைக்குள் நுழையாமலேயே லாபிகளில் (Lobbies) இருந்தபடியே தங்களது வருகையைப் பதிவு செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. ஆனால், இந்த பழைய நடைமுறை இனி நிறுத்தப்படுகிறது. புதிய உத்தரவின்படி, எம்.பி.க்கள் அவைக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட இருக்கைகளுக்குச் சென்று, அங்கிருந்து மட்டுமே தங்களது வருகையைப் பதிவு செய்ய முடியும்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் முழுமையாகப் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார். அவைக்கு வராமல் வருகைப் பதிவை மட்டும் செய்துவிட்டுச் செல்வதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version