Home விளையாட்டு தங்க மங்கைக்கு என்னாச்சு? ‘இனி விளையாட முடியாது’.. கண்ணீருடன் விடைபெற்ற சாய்னா!

தங்க மங்கைக்கு என்னாச்சு? ‘இனி விளையாட முடியாது’.. கண்ணீருடன் விடைபெற்ற சாய்னா!

இந்திய பேட்மிண்டன் உலகின் அடையாளமாகவும், பல இளம் வீராங்கனைகளுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்த நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஓய்வுக்கான காரணம்: நீண்ட காலமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த சாய்னா, “வலி அதிகமாக இருப்பதால் இனி என்னால் தொடர்ந்து விளையாட முடியாது,” என்று தனது ஓய்வு முடிவிற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார். இது விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதனைகளின் சிகரம்: இந்தியாவிற்காகப் பல சர்வதேச பதக்கங்களைக் குவித்தவர் சாய்னா நேவால். இவரது முக்கிய சாதனைகள்:

  • ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம்.

  • உலக சாம்பியன்ஷிப்: ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம்.

  • காமன்வெல்த் போட்டிகள்: 3 தங்கப் பதக்கங்கள்.

  • ஆசிய சாம்பியன்ஷிப்: 3 வெண்கலப் பதக்கங்கள்.

இந்திய விளையாட்டுத் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்.

Exit mobile version