வங்கதேசத்தில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்பு கருதி நடவடிக்கை: பாதுகாப்பு காரணங்களுக்காக, வங்கதேசத்தில் வசித்து வரும் இந்தியத் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரை உடனடியாகத் தாயகம் திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
காரணம் என்ன? மதவாதிகளால் அங்குள்ளவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கும் வகையிலும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மத்திய அரசு இந்தத் திடீர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது
