Home லைப் ஸ்டைல் முருங்கை டீ போடுவது எப்படி..?? தினமும் காலையில் குடித்தால் உடலில் நடக்கும் அதிசயங்கள்.!!!

முருங்கை டீ போடுவது எப்படி..?? தினமும் காலையில் குடித்தால் உடலில் நடக்கும் அதிசயங்கள்.!!!

எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் முருங்கை இலைகள், சுமார் 2000 ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் வகித்து வருகின்றன. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது வரை இதன் பலன்கள் ஏராளம்.குறிப்பாக, முருங்கை இலையில் தேநீர் தயாரித்து, காலை வேளையில் அருந்துவது உடல்நலத்திற்குப் பெரும் நன்மை பயக்கும்.

ஒரு பாத்திரத்தில் நீர், முருங்கை இலை (அல்லது பொடி) மற்றும் இஞ்சி சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகலாம்.இந்த பானம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி (Detox), சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

மேலும், இதில் நிறைந்துள்ள வைட்டமின் ‘சி’ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மன அழுத்தம், சோர்வு மற்றும் பதற்றத்தைப் போக்கி உடலுக்கு உடனடிப் புத்துணர்ச்சி அளிக்கிறது. நவீன கால வாழ்க்கை முறை நோய்களுக்கு, இந்த எளிய முருங்கை டீ ஒரு சிறந்த இயற்கை மருந்தாகத் திகழ்கிறது…

Exit mobile version