Home உலகம் பெற்றோர்களே உஷார்..!! குழந்தைகளை முத்தமிடுவதால் பரவும் கொடிய வைரஸ்..!! தாயின் உருக்கமான பதிவு..!!

பெற்றோர்களே உஷார்..!! குழந்தைகளை முத்தமிடுவதால் பரவும் கொடிய வைரஸ்..!! தாயின் உருக்கமான பதிவு..!!

ஜூவான் என்ற இரண்டு வயது சிறுவனை, அவனது உறவினர் ஒருவர் அன்பின் மிகுதியால் முத்தமிட்டுள்ளார். அந்த நபருக்கு ‘ஹெர்பெஸ்’ (Herpes) எனப்படும் வைரஸ் தொற்று இருந்ததாகத் தெரிகிறது. முத்தத்தின் மூலம் அந்த வைரஸ் சிறுவனின் முகத்தில் பரவி, அவனது கண்களைத் தாக்கியுள்ளது.

‘ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ்’ (Herpes Simplex Virus – HSV) எனும் இந்த வைரஸ் தாக்கியதால், சிறுவனின் கண்ணில் கடுமையான நோய்த்தொற்று ஏற்பட்டு, இறுதியில் அவனது ஒரு கண் பார்வை பறிபோனது. இந்தச் சம்பவம் சிறுவனின் குடும்பத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து சிறுவனின் தாய் கண்ணீர் மல்கத் தெரிவிக்கையில், “கைக்குழந்தைகளை உறவினர்களோ அல்லது நண்பர்களோ முத்தமிடுவதைத் தவிர்க்க வேண்டும். அன்பாகச் செய்யும் ஒரு செயல், என் மகனுக்கு நேர்ந்தது போல வேறு எந்தக் குழந்தைக்கும்

ஆபத்தாக முடியக்கூடாது,” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவர்கள் இதுகுறித்துக் கூறுகையில், “பெரியவர்களுக்கு சாதாரண உதட்டுப் புண் (Cold Sores) போலத் தோன்றும் ஹெர்பெஸ் தொற்று,

குழந்தைகளுக்கு உயிராபத்தை அல்லது உடல் உறுப்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே, பச்சிளம் குழந்தைகளை முகத்திலோ அல்லது உதட்டிலோ முத்தமிடுவதைத் தவிர்ப்பது மிகவும் பாதுகாப்பானது,” என்று எச்சரிக்கின்றனர்…

Exit mobile version