Home உலகம் 2026 உலகின் மிகவும் நம்பகமான அரசு.. முதலிடம் பிடித்தது அமீரகம்..!!

2026 உலகின் மிகவும் நம்பகமான அரசு.. முதலிடம் பிடித்தது அமீரகம்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, 2026-ம் ஆண்டிற்கான உலகின் மிகவும் நம்பகமான அரசாங்கம் (World’s Most Trusted Government) என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பெற்றுள்ளது.

உலக நாடுகளின் அரசுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமீரகம் முதலிடம் பிடித்திருப்பது, அந்நாட்டு அரசின் நிர்வாகத் திறனுக்கும்,

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் கிடைத்த உலகளாவிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சாதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அமீரகம் உலகின்

மிகவும் நம்பகமான அரசாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து தனது பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார். மக்களின் நம்பிக்கையை வெல்வதே ஒரு அரசின் மிகப்பெரிய வெற்றி என்பதை இந்த ஆய்வு முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன…

Exit mobile version