Home அரசியல் பாஜக – என்.டி.ஏ ஆட்சி நிச்சயம்.. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி உரை..!!

பாஜக – என்.டி.ஏ ஆட்சி நிச்சயம்.. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி உரை..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர்

எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழகத்தில் வரவிருக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து நம்பிக்கையுடன் பேசினார்.

அவர் பேசுகையில், “பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தலைமையிலான ‘டபுள் என்ஜின்’ அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும்,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், அவர், “தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான மற்றும் ஊழலற்ற ஒரு முன்னோடி மாநிலமாக மாற்றுவதே எங்கள் கூட்டணியின் முக்கிய லட்சியம்,” என்றும் உறுதி அளித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்…

Exit mobile version