ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்ற பிரபலமான ‘பிக் டிக்கெட்’ (Big Ticket) லாட்டரி குலுக்கலில், கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த ஷஃபிக் (Shafik) என்ற இந்தியருக்கு ரூ.12 லட்சம் பரிசு விழுந்துள்ளது. வளைகுடா நாடுகளில் நடைபெறும் லாட்டரி குலுக்கல்கள்
புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளாக துபாயில் தங்கிப் பணியாற்றி வரும் ஷஃபிக், தனது அதிர்ஷ்டத்தை சோதிக்கும் வகையில் வாங்கிய
பிக் டிக்கெட் லாட்டரி சீட்டிற்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. நீண்ட காலமாகத் துபாயில் வசித்து வந்தாலும், எதிர்பாராத நேரத்தில் கிடைத்த இந்த வெற்றிச் செய்தி அவருக்குப் பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஷஃபிக், “கடந்த 15 வருடங்களாக இங்குப் பணியாற்றி வருகிறேன். தற்போது கிடைத்துள்ள இந்தப் பரிசுத் தொகை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமாக, இந்தப் பணத்தின்
மூலம் எனது குடும்பத்தினரைத் துபாய்க்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளேன்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சாதாரணத் தொழிலாளியாகச் சென்ற ஒருவருக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி, அங்குப் பணியாற்றும் பலருக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது…
