நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ல் வெளியாகி ரூ.635 கோடி வசூலை வாரிக்குவித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பிரபல இயக்குநர் ராஜகுமாரன் இப்படத்தைக் குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ராஜகுமாரன்,
“ஜெயிலர் படத்தைப் பார்ப்பதே கொடுமையாக இருந்தது; சகிக்க முடியவில்லை. பாதி படத்திலேயே எழுந்து ஓடிவிடலாமா என்று தோன்றியது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் வசூல் குறித்துப் பேசுகையில், “ரூ.600 கோடி வசூல் என்கிறார்கள்; ‘ப்ளூ பிலிம்’ (Blue Film) எடுத்தால் கூடத்தான் நல்ல வசூல் வரும்” என்று ஒப்பிட்டுப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், “ரஜினி பணத்திற்காகவும், சம்பளத்திற்காகவும் மட்டுமே படம் நடிக்கிறாரே தவிர, மக்களுக்கு எந்த நல்ல கருத்தையும் சொல்லவில்லை. இதற்கிடையில் இரண்டாம் பாகம் வேறு எடுக்கிறார்கள்” என்று ரஜினியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ராஜகுமாரனின் இந்தத் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…
