சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் ராஜகுமாரன், ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் குறித்து தனது வெளிப்படையான கருத்தைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “ஜெயிலர் படம் பார்த்தேன், அது மிகவும் கொடுமையாக இருந்தது. என்னால் அந்தப் படத்தை முழுமையாகச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை,
எனத் தெரிவித்தார் திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் மேக்கிங் குறித்து அதிருப்தி தெரிவித்த அவர், ஒரு சீனியர் இயக்குநராக அந்தப் படத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பொதுவாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடிய இந்தப் படத்தை, ஒரு சக இயக்குநர் இவ்வளவு வெளிப்படையாக விமர்சித்தது சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது. ஏற்கனவே ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்கள் குறித்தும் ராஜகுமாரன்
சில விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், தற்போது ‘ஜெயிலர்’ படத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. இவரது இந்த ‘ஓபன் டாக்’ ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒரு தரப்பினர் ‘இது அவரது தனிப்பட்ட கருத்து’ என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்…
