அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் குறித்து எழுப்பிய விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம், நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் ஊழல் ஒழிப்பு குறித்த நிலைப்பாடுகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், விஜய்யின் நிர்வாகத் திறனை மறைமுகமாகச் சாடினார்.
“முதலில் உங்கள் படங்களுக்குத் திரையரங்குகளில் பிளாக்கில் (Black Ticket) டிக்கெட் விற்கப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள். உங்கள் கண் முன்னே நடக்கும் அந்தச் சிறிய ஊழலையே உங்களால் ஒழிக்க முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கையில், அரசியலுக்கு வந்து எப்படிப் பெரும் ஊழல்களை ஒழிக்கப் போகிறீர்கள்?” என்ற ரீதியில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொந்தப் பட வெளியீட்டில் நடக்கும் முறைகேடுகளையே கட்டுப்படுத்த முடியாதவர், ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஊழலை எப்படிக் கையாள்வார் என டிடிவி தினகரன் முன்வைத்த இந்த வாதம், விஜய் ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது…
