நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 2026-ம் ஆண்டிற்கான இந்த விருதுப் பட்டியலில் கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொதுச் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர்.குறிப்பாக, இம்முறை திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். மலையாள திரையுலகின் ஜாம்பவானான நடிகர் மம்மூட்டிக்கு ‘பத்ம பூஷன்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய நீண்டகாலப் பங்களிப்பிற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல், பான்-இந்திய நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் மாதவனுக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறைந்த மூத்த இந்தி நடிகர் தர்மேந்திராவுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
