தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜய் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்வைத்துள்ள விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, நடிகர் விஜய்யின் அரசியல் பலத்தை கணிதக் குறியீடான ‘பூஜ்ஜியம்’ (0) உடன் ஒப்பிட்டுப் பேசினார். “விஜய் ஒரு 0 மாதிரி; அவர் தனியாக இருந்தால் அவருக்கு எந்த மதிப்பும் கிடையாது.
ஆனால், அதே 0 வேறு ஒருவருடன் (எண் 1 போன்றவர்களுடன்) சேர்ந்தால் மட்டுமே அதற்கு மதிப்பு உண்டு,” என்று அவர் குறிப்பிட்டார்.அதாவது, விஜய் தனித்து நின்று அரசியலில் சாதிக்க முடியாது என்றும், வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே அவருக்கு அரசியல் மதிப்பு கிடைக்கும் என்றும் ,
தமிழிசை மறைமுகமாகச் சாடியுள்ளார். “தனித்துப் போட்டி” என்று விஜய் பேசி வரும் நிலையில், அவரை ‘மதிப்பற்ற பூஜ்ஜியம்’ எனத் தமிழிசை விமர்சித்துள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது…
