Home சினிமா சின்னத்திரைக்கு வரும் ‘அமராவதி’ நாயகி – நடிகை சங்கவியின் புது சீரியல் அறிவிப்பு..!!

சின்னத்திரைக்கு வரும் ‘அமராவதி’ நாயகி – நடிகை சங்கவியின் புது சீரியல் அறிவிப்பு..!!

90-களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சங்கவி. 1993-ல் ‘கொக்கரக்கோ’ படம் மூலம் அறிமுகமான இவர், அஜித்தின் ‘அமராவதி’, விஜய்யின் ‘ரசிகன்’ மற்றும் சரத்குமாரின் ‘நாட்டாமை’ உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளிலும் சுமார் 15 ஆண்டுகள் கோலோச்சிய சங்கவி,

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். ஆனால் இமுறை வெள்ளித்திரையில் அல்ல, சின்னத்திரையில்!ஜெயா தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ‘பாளையத்து அம்மன்’ என்ற புதிய தொடரில் சங்கவி நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளித்திரையில் ரசிகர்களைக் கவர்ந்த சங்கவி, தற்போது சின்னத்திரை மூலம் இல்லத்தரசிகளைச் கவரத் தயாராகிவிட்டது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது…

Exit mobile version