Home அரசியல் பாஜகவின் நம்பர் 1 அடிமை இபிஎஸ்.. தஞ்சை மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு..!!

பாஜகவின் நம்பர் 1 அடிமை இபிஎஸ்.. தஞ்சை மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு..!!

தஞ்சாவூரில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும்,

பாஜகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் ‘நம்பர் 1’ முரட்டு அடிமையாகச் செயல்பட்டு வருகிறார்.

அவருக்குப் போட்டியாகப் புதிதாக எத்தனை அடிமைகள் வந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசின் அடையாளம் பாசிசம் என்றால்,

தமிழ்நாட்டை ஆண்ட முந்தைய அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம்.” இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த மாநாட்டில் திரளான பெண்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்…

Exit mobile version