Home அரசியல் செங்கோட்டையனை ஏன் சேர்த்தீங்க.?? விஜய்யை பார்த்து டிடிவி தினகரன் கேட்ட முக்கிய கேள்வி..!!

செங்கோட்டையனை ஏன் சேர்த்தீங்க.?? விஜய்யை பார்த்து டிடிவி தினகரன் கேட்ட முக்கிய கேள்வி..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது தொடர்பாக அவர் முன்வைத்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அதிமுகவை ஒரு ஊழல் கட்சி என்று விஜய் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

அப்படி இருக்கையில், அதே கட்சியைச் சேர்ந்த செங்கோட்டையனைத் தனது கட்சியில் (த.வெ.க) இணைத்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.மேலும், “ஊழல்வாதிகள் என்று கூறிவிட்டு, அவர்களைத் தன் கட்சியில் இணைத்துக்கொள்வது என்ன மாதிரியான அரசியல்? விஜய்யின் நிலைப்பாடு என்னவென்றே புரியவில்லை,”

என்றும் அவர் கடுமையாகச் சாடினார். விஜய்யின் சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியிருப்பது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது…

Exit mobile version