உலக நாடுகளே ஆச்சரியத்துடன் உற்றுநோக்கும் வகையில், ஆசியாவின் மிகப்பெரிய சிவில் விமானப் போக்குவரத்து நிகழ்ச்சியான ‘விங்ஸ் இந்தியா 2026’ (Wings India 2026) நாளை (ஜனவரி 28) ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது.
நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில், இந்திய விமானப்படையின் பெருமையான ‘சூர்ய கிரண்’ சாகசக் குழுவின் விமான சாகசங்கள் நாளை வானை அதிர வைக்கவுள்ளன. இவர்களுடன் இங்கிலாந்தின் புகழ்பெற்ற
‘மார்க் ஜெஃப்ரி’ (Mark Jeffery) சாகசக் குழுவும் இணைந்து வானில் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசங்களை நிகழ்த்த உள்ளனர். இதுமட்டுமின்றி, நாளை மாலை நடைபெறவுள்ள பிரம்மாண்டமான
ட்ரோன் ஷோ பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கத் தயாராக உள்ளது. இந்திய விமானப் போக்குவரத்து: எதிர்காலத்திற்கான பாதை என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட
20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். போயிங் (Boeing), ஏர்பஸ் (Airbus) போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் அதிநவீன விமானங்களை இங்கே காட்சிப்படுத்தவுள்ளன.
நாளை தொடங்கும் இந்த நிகழ்வு, விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா வல்லரசு என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு பறைசாற்ற உள்ளது. சுமார் 1.5 லட்சம் பார்வையாளர்கள் இந்த அதிசயத்தைக் காண கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது…
