Home சினிமா “துரோகம் செய்யும் முதலைகள்” – டி.இமான் யாரை தாக்கிப் பேசினார்..??

“துரோகம் செய்யும் முதலைகள்” – டி.இமான் யாரை தாக்கிப் பேசினார்..??

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் விஜய்யின் ‘தமிழன்’ படம் மூலம் அறிமுகமாகி, இன்று தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளார். தற்போது ‘மாம்போ’, ‘வள்ளிமயில்’, ‘பப்ளிக்’ உள்ளிட்ட பல படங்கள் அவர் கைவசம் உள்ளன.இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில், “என்னிடம் மட்டும் ஒரு டைம் மிஷின் (Time Machine) இருந்தால், 10 ஆண்டுகளுக்கு முந்தைய இமானைச் சந்தித்து எச்சரித்திருப்பேன்,” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

மேலும், “பலர் வெளியில் நல்லவர்கள் போல நடிப்பார்கள். ஆனால் நேரம் வரும்போது துரோகம் செய்து விலகிச் செல்லும் ‘முதலைகளாக’ மாறிவிடுவார்கள்,” என்று தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை மறைமுகமாகச் சாடியுள்ளார்.

வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் இமான், யாரைக் குறிப்பிட்டு இப்படிப் பேசியுள்ளார்? அவருக்குத் துரோகம் செய்தது யார்? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்…

Exit mobile version