Home லைப் ஸ்டைல் எலும்புகளை உருக்குலைக்கும் 5 உணவுகள் – உஷார்.!! நீங்கள் சாப்பிடுவது இதுவா..??

எலும்புகளை உருக்குலைக்கும் 5 உணவுகள் – உஷார்.!! நீங்கள் சாப்பிடுவது இதுவா..??

உடலின் அஸ்திவாரமான எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்ள வைட்டமின் டி மற்றும் கால்சியம் உணவுகள் அவசியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாம் அன்றாடம் விரும்பி சாப்பிடும் சில உணவுகளே எலும்புகளை உருக்குலைக்கும் என்பது அதிர்ச்சியான உண்மை. இந்த 5 உணவுகளைத் தவிர்ப்பது எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியம்:

  1. உப்பு: இதில் உள்ள அதிகப்படியான சோடியம், உடலிலுள்ள கால்சியத்தைச் சிறுநீர் வழியாக வெளியேற்றி, எலும்புகளை மெலிந்து போகச் செய்கிறது.

  2. சர்க்கரை: இது கால்சியம் உறிஞ்சப்படுவதைத் தடுப்பதோடு, எலும்புத் திசுக்கள் மீண்டும் உருவாவதைக் கடினமாக்குகிறது.

  3. குளிர்பானங்கள்: இவற்றிலுள்ள பாஸ்போரிக் அமிலம், கால்சியம் – பாஸ்பரஸ் சமநிலையைச் சீர்குலைத்து, இரட்டிப்பு பாதிப்பைத் தருகிறது.

  4. காஃபின்: காபி மற்றும் எனர்ஜி பானங்களில் உள்ள காஃபின், கால்சியம் இழப்பை விரைவுபடுத்துகிறது.

  5. பேக்கரி உணவுகள்: பிஸ்கட், பிரட் போன்றவற்றில் எலும்புக்குத் தேவையான மக்னீசியம் இல்லாததால், இவை எலும்பு ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன. எனவே, வலுவான எலும்புகளைப் பெற இந்த உணவுகளைக் குறைப்பதே சிறந்தது…

Exit mobile version