அதிமுகவை விமர்சித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் மற்றும் தனிப்பட்ட செயல்பாடுகளை மிகக் கடுமையாகச் சாடினார்.”ஊழலைப் பற்றிப் பேச விஜய்க்குத் தகுதியில்லை. அவர்தான் மிகப்பெரிய ஊழல் பேர்வழி. தனது பட டிக்கெட்டுகளைக் கள்ளச்சந்தையில் விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
அவர் மீது ஏற்கனவே ரூ.1.5 கோடி வரி ஏய்ப்பு வழக்கு உள்ளது,” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், லாட்டரி அதிபர் ஆதவ் அர்ஜுனாவுடன் கைகோர்த்துக்கொண்டு விஜய் ஊழலை எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது என்றும் கிண்டலடித்தார்.தொடர்ந்து திமுக அரசை விமர்சித்த அவர்,
“ஊழல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்ப்பவர் முதல்வர் ஸ்டாலின். தேர்தல் வருவதால் நாடகமாடுகிறார்கள்,” என்று சாடினார். மகளிருக்கு ரூ.1000 கொடுத்துவிட்டு விலைவாசியை ஏற்றிவிட்டதாகவும், 2026-ல் அதிமுக கூட்டணி நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்…
