Home அரசியல் தனித்துப் போட்டியா.? கூட்டணியா.? – இன்று ஓ.பி.எஸ் வெளியிடும் அதிரடி தகவல்..!!

தனித்துப் போட்டியா.? கூட்டணியா.? – இன்று ஓ.பி.எஸ் வெளியிடும் அதிரடி தகவல்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) தனது கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்று முக்கிய முடிவெடுக்க உள்ளார்.யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்துத் தனது ஆதரவாளர்களுடன் இன்று விரிவான ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு,

தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிமுக, பாஜக அல்லது வேறு ஏதேனும் அணியுடன் இணைகிறாரா அல்லது தனித்துச் செயல்படுவாரா .

என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஓ.பி.எஸ்-ன் இந்த முடிவு வரவிருக்கும் தேர்தலில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது…

Exit mobile version