Home லைப் ஸ்டைல் தயிர் சாப்பிடும் சரியான முறை – நன்மைகளும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்..!!

தயிர் சாப்பிடும் சரியான முறை – நன்மைகளும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்..!!

தயிரை உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் நல்லது; இது ஊட்டச்சத்துக்களை உடல் எளிதாக உறிஞ்ச உதவுகிறது. தயிரைச் சாப்பிடும்போது எப்போதும் அறை வெப்பநிலையிலேயே வைத்திருக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட (Fridge) தயிரைச் சாப்பிடுவது செரிமானப் கோளாறுகளை உண்டாக்கும். மேலும், பழங்கள், காய்கறிகள் அல்லது தானியங்களுடன் கலந்து சாப்பிடுவது கூடுதல் பலனைத் தரும். தயிருடன் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய முறைகள்: தயிரை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது, இது வயிற்று உபாதைகளை ஏற்படுத்தலாம். அதேபோல், இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவதால் சளி மற்றும் கபம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தயிரை ஒருபோதும் சூடுபடுத்தக் கூடாது; அப்படிச் செய்தால் அதில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.

தயிர் அளிக்கும் நன்மைகள்: தொடர்ந்து தயிர் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகும். இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்கும், புரதம் உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும், இதிலுள்ள தாதுக்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. எனவே, முறையான பழக்கவழக்கங்களைக் கையாண்டு தயிரை உணவில் சேர்த்துக்கொண்டால் நீண்ட கால ஆரோக்கியம் உறுதி…

Exit mobile version