சமீபத்தில் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து நிலவி வந்த பல்வேறு யூகங்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாகிஸ்தான் அணி இந்தத் தொடரைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்தாலும், இந்திய அணி தனது திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவலில், “டி20 உலகக் கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணித்தாலும், இந்திய அணி திட்டமிட்டபடி இலங்கையிலுள்ள கொழும்புக்குச் செல்லும். அங்கு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதுடன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைகளை இந்திய அணி முழுமையாகப் பின்பற்றும்,” என்று உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு எதுவாக இருப்பினும், ஐசிசி நடத்தும் இந்தத் தொடரில் இந்திய அணியின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியிலிருந்த குழப்பம் நீங்கியுள்ளது…
