Home அரசியல் பாஜக அரசுக்கு அடிமையாக அதிமுக இருக்கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்..!!!

பாஜக அரசுக்கு அடிமையாக அதிமுக இருக்கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்..!!!

தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து வஞ்சகம் இழைத்து வரும் பாஜக அரசுக்கு, அடிமையாகச் சாமரம் வீசும் நிலையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணாவின் பெயரைத் தனது கட்சியின் பெயரில் தாங்கியிருக்கும் அதிமுக, அவர் வகுத்தக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுவது வேதனையானது. தமிழகத்தில் ‘இந்திக்கு இடமில்லை’ என்ற இருமொழிக் கொள்கையை அண்ணா அவர்கள் ஆணித்தரமாக நிலைநாட்டினார்.

ஆனால், அண்ணா நிலைநாட்டிய இந்த மண்ணில், தற்போது இந்தி மொழியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. மாநில உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய செயல்களுக்கு அதிமுக துணை போவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், மொழிப்பற்றையும் சிதைக்க நினைக்கும் எந்தவொரு முயற்சியையும் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கிற்குத் தாளம் போடும் அடிமைக் கூட்டமாக அதிமுக மாறியுள்ளதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மாநில நலனை விடத் தனது பதவியையும் சுயநலத்தையுமே அதிமுக முன்னிறுத்துகிறது என முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் மிகுந்த ஆவேசத்துடன் குறிப்பிட்டார்…

Exit mobile version