அன்றாட உணவில் நாம் பயன்படுத்தும் பருப்பு மற்றும் பயறு வகைகளை அப்படியே உண்பதை விட, முளைக்கட்டி உண்பதே ஆரோக்கியத்திற்குச் சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பருப்புகள் முளைகட்டும் போது ஏற்படும் வேதியியல் மாற்றங்களால், அதில் உள்ள இரும்புச்சத்து எளிதாக உடலில் உறிஞ்சப்படுகிறது. சோயா பீன்ஸ் போன்ற பருப்புகளைப் பச்சையாகவோ அல்லது ஊறவைத்தோ நேரடியாக உண்ணும்போது, அதில் உள்ள சில புரோட்டீன்கள் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கை உண்டாக்க வாய்ப்புள்ளது.
இவற்றை வேகவைக்கும் போது நச்சுக்கள் அழிந்தாலும், உடலுக்குத் தேவையான முக்கிய வைட்டமின்கள் வெளியேறிவிடுகின்றன.இந்தச் சிக்கலைத் தவிர்க்க, பருப்புகளை முளைக்கட்டி உண்பதே மிகச்சிறந்த வழிமுறையாகும். முளைகட்டுதல் மூலம் நச்சுத்தன்மை நீங்குவதுடன், வைட்டமின்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்டுச் செரிமானமும் எளிதாகிறது.
குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை வெறும் தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடுவதை விட, முளைக்கட்டிச் சாப்பிடுவதன் மூலம் கூடுதல் பலனைப் பெறலாம். ஏழ்மையிலும் ஊட்டச்சத்தைப் பெற முளைகட்டிய பயிர்கள் ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்…
