Home சினிமா நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் உறுதி – ரூ.15 கோடி புகாரில் நீதிமன்ற அதிரடி...

நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் உறுதி – ரூ.15 கோடி புகாரில் நீதிமன்ற அதிரடி தீர்ப்பு…!!

நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (06 பிப்ரவரி 2026) அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படத்திற்காக நடிகர் விஜய் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை முறையாகக் கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வருமான மறைப்பிற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில்,அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தற்போது இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

வருமான வரித்துறையின் ஆதாரங்கள் மற்றும் சட்ட விதிகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அபராதத் தொகை செல்லும் எனத் தெளிவுபடுத்தினார். அரசியல் களத்தில் தீவிரம் காட்டி வரும் சூழலில், நடிகர் விஜய்க்கு எதிராக வந்துள்ள இந்தத் தீர்ப்பு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Exit mobile version