Home விளையாட்டு இந்தியாவே ஆடலனாலும் அரங்கம் நிறைந்தது..! சென்னை ரசிகர்களின் கிரிக்கெட் காதல்..!!

இந்தியாவே ஆடலனாலும் அரங்கம் நிறைந்தது..! சென்னை ரசிகர்களின் கிரிக்கெட் காதல்..!!

நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் ரசிகர்கள் காட்டிய ஆர்வமும், வருகையும் கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

வழக்கமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அல்லது ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டுமே மைதானங்கள் நிரம்பி வழியும் சூழலில், சென்னை ரசிகர்கள் தங்களை மீண்டும் ஒருமுறை “விவரம் அறிந்த ரசிகர்கள்” (Knowledgeable Crowd) என்பதை நிரூபித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண 20,390 ரசிகர்கள் திரண்டிருந்தனர். அதேபோல, பிப்ரவரி 10-ம் தேதி நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அணிகளுக்கு இடையிலான போட்டியைக் காண 19,623 ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் அணி பங்கேற்காத போதும், சுமார் 20,000 பேர் நேரில் வந்து தரமான கிரிக்கெட்டை ரசித்துள்ளது, சென்னை ரசிகர்களின் உண்மையான கிரிக்கெட் காதலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது…

Exit mobile version