Home லைப் ஸ்டைல் சென்னையில் காகங்கள் உயிரிழப்பு.. H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி-இறைச்சி பிரியர்கள் கவனத்திற்கு..!!

சென்னையில் காகங்கள் உயிரிழப்பு.. H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி-இறைச்சி பிரியர்கள் கவனத்திற்கு..!!

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அரைவேக்காடு முட்டை (Half Boil) மற்றும் சரியாக வேகவைக்கப்படாத இறைச்சிகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை அடையாறு பகுதியில் கடந்த சில நாட்களாக காகங்கள்

அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த கால்நடை பராமரிப்புத் துறை, இறந்த காகங்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில், காகங்களுக்கு ‘ஹெச் 5. என் 1’ (H5N1) வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அரசின் அறிவுறுத்தல்கள்: பறவைக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தவும், மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்கவும் அரசு பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது:

  • முழுமையாக வேகவைக்கவும்: கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு அதிக வெப்பநிலையில் வேகவைத்து மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

  • ஆஃப் பாயில் தவிர்க்கவும்: பாதியாக வேகவைக்கப்பட்ட முட்டைகள் (Half Boil) மூலம் வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால், அவற்றைச் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  • சுத்தம் அவசியம்: இறைச்சியைக் கையாண்ட பிறகு கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்…

Exit mobile version