Home சினிமா “திருமணம் கட்டாயம் இல்லை” – வைரலாகும் நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் பேட்டி.!!

“திருமணம் கட்டாயம் இல்லை” – வைரலாகும் நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் பேட்டி.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிம்புவிடம் நீண்டகாலமாக ரசிகர்களால் கேட்கப்பட்டு வரும் ஒரே கேள்வி, “அவரது திருமணம் எப்போது?” என்பதுதான். இதற்குப் பதிலளிக்கும் விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், “திருமணம் என்பது கட்டாயமான ஒன்றல்ல” எனத் தெரிவித்து இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளார். இன்றைய கால மொபைல் கலாச்சாரம் மனித உணர்ச்சிகளைப் பெருமளவு மாற்றிவிட்டதாகவும், காதலும் பிரிவும் மிக வேகமாக நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், ஆழமான உறவுகள் இப்போதும் எங்கோ ஓரிடத்தில் இருக்கத்தான் செய்கின்றன என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இருவர் மனதளவில் முழுமையாகத் தயாராக இருக்கும்போது மட்டுமே ஒரு உறவு அல்லது திருமணம் நடக்க வேண்டுமே தவிர,

சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக நான் எதையும் செய்ய மாட்டேன் என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்காக ஒரு பிணைப்பில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்ற அவரது இந்த நேர்மையான பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. சிம்புவின் இந்தத் தனிப்பட்ட கருத்துக்களுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்,

அவரது திருமணத்திற்காக ரசிகர்கள் இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றே தெரிகிறது. தனது திரையுலகப் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சிம்புவின் இந்தப் புதிய பார்வை சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அவரது இந்த நிலைப்பாட்டைப் பலரும் பாராட்டி வருகின்றனர்…

Exit mobile version