Home அரசியல் திரையில் தான் “சூப்பர் ஸ்டார்”, அரசியலில்..?? – நடிகர் விஜய் குறித்து இபிஎஸ் விமர்சனம்..!!

திரையில் தான் “சூப்பர் ஸ்டார்”, அரசியலில்..?? – நடிகர் விஜய் குறித்து இபிஎஸ் விமர்சனம்..!!

சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே (India Today) கருத்தரங்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது தமிழக அரசியல் மற்றும் புதிய கட்சிகளின் வருகை குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அதிரடியான பதில்களை அளித்தார்.எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகம் இதுவரை ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. ஒரு கட்சி தேர்தலைச் சந்தித்தால் தான் அவர்களுக்கு மக்களிடையே எவ்வளவு வாக்கு வங்கி உள்ளது என்பதைக் கணிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் குறிப்பிடுகையில், “விஜய் திரையில் வேண்டுமானால் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் அரசியலில் நிலைமை வேறு” என்று சுட்டிக்காட்டினார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசியலில் எம்ஜிஆர் அவர்களின் ஆளுமையை எவரும் தவிர்க்க முடியாது என்பதை வலியுறுத்தினார்.

“எம்ஜிஆர் பெயரைச் சொன்னால் தான் தமிழகத்தில் கட்சியையே நடத்த முடியும் என்ற சூழல் உள்ளது” என்று கூறிய அவர், புதிய கட்சிகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய சவால்களை மறைமுகமாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கூட்டணி குறித்தும் அவர் விரிவாகப் பேசினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது…

Exit mobile version