தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு ‘ஆட்சியில் பங்கு’ என்பது ஒத்து வராது என்றும், வெற்றிகரமாக செயல்பட்டு வரும் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு சதி செய்து வருவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், முதலமைச்சரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து அவர் பேசுகையில், “ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. நம்முடைய கூட்டணியின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும், நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும் இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சதித் திட்டங்களுக்குக் கூட்டணி கட்சிகள் இடமளிக்கக் கூடாது என்றும், இத்தகைய முயற்சிகளை முறியடித்து கூட்டணி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. வரவிருக்கும் தேர்தல்களிலும் இந்த கூட்டணித் தர்மம் தொடரும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக முதலமைச்சரின் இந்த பேச்சு அமைந்துள்ளது…
