Home அரசியல் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்..!! அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் தீவிர பிரச்சாரத் திட்டம்…!!

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்..!! அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் தீவிர பிரச்சாரத் திட்டம்…!!

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிகரமான முழக்கத்துடன் இந்தப் பிரச்சாரம் அமைய உள்ளது. வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் இந்தப் புதிய கட்டப் பரப்புரை துவங்குகிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்களுக்கு அவர் பல்வேறு தொகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் அவர் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து மாதவரம் மற்றும் பூந்தமல்லி ஆகிய தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சூறாவளிப் பயணம் மேற்கொள்கிறார். பொன்னேரி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளையும் உள்ளடக்கி இந்தப் பரப்புரைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவின் இந்த வேகம் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் இந்த இரண்டாம் கட்டப் பரப்புரை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டுவதே இப் பயணத்தின் முக்கிய நோக்கம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

Exit mobile version