Home செய்திகள் மீண்டும் பதற்றம்..!! 25 காரைக்கால் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை..!!

மீண்டும் பதற்றம்..!! 25 காரைக்கால் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை..!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இன்று ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் அதிரடியாகச் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி, காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்களை அவர்கள் கைது செய்துள்ளனர்.இந்தச் சம்பவம் மீனவ கிராமங்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தொடர்ந்து இது போன்ற சிறைபிடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவ சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும்,

அவர்களது வாழ்வாதாரமான படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்…

Exit mobile version