Home அரசியல் கரூர் வழக்கு – விஜய்யிடம் 5 மணி நேரம் நடந்த விசாரணை நிறைவு.!!

கரூர் வழக்கு – விஜய்யிடம் 5 மணி நேரம் நடந்த விசாரணை நிறைவு.!!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில், நடிகர் விஜய்யிடம் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. இன்று சுமார் 5½ மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 12-ம் தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்றது.

அப்போது அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 41 பேர் பலியான இவ்வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், விஜய்யிடம் நடத்தப்பட்ட இந்தத் தொடர் விசாரணைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன…

Exit mobile version