நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரும் விவகாரத்தில், படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கில்,
தயாரிப்பு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர
மோகன் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு முன்புஇன்று பட்டியலிடப்பட்டுள்ளது. இன்று (ஜனவரி 20) காலை 11.30 மணியளவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் வெளியீடு தொடர்பான முக்கிய வழக்கு என்பதால், நீதிமன்றத்தின் உத்தரவுக்காக திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்…
