கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த 62 நாட்களாக நடைபெற்று வந்த மகர விளக்கு பூஜைக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று (ஜனவரி 20) காலை ஐயப்பனுக்கு சிறப்புப் பாடலான ‘ஹரிவராசனம்’ பாடப்பட்டு கோயில் நடை முறைப்படி அடைக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று (திங்கட்கிழமை) இரவுடன் பக்தர்களுக்கான தரிசனம் முழுமையாக நிறைவு பெற்றது. கடந்த இரண்டு மாதங்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டுக்கான மகர விளக்கு யாத்திரை காலம் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது…
