Monday, March 2, 2026
No menu items!

‘பராசக்தி’ வெற்றிக்குப் பிறகு ரூ.70 கோடியா.?? தனுஷை முந்தும் எஸ்கே.!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கிடையே சம்பளப் போட்டி நிலவுவது வழக்கமான ஒன்றுதான். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி, முன்னணி நடிகரான தனுஷையே யோசிக்க வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.’டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றியைத் தொடர்ந்து ரூ.30 கோடியாக இருந்த சிவகார்த்திகேயனின் சம்பளம், சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட்  படங்களான அமரன் , பராசக்தி  வெற்றிக்குப் பிறகு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் தனது அடுத்த படங்களுக்கு ரூ.65 முதல் ரூ.70 கோடி வரை சம்பளம் நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதன் மூலம் அவர் நடிகர் தனுஷின் சம்பள அளவை நெருங்கியுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்தத் திடீர் அசுர வளர்ச்சியை உற்றுநோக்கி வரும் நடிகர் தனுஷ்,

தனது அடுத்தடுத்த படங்களுக்கு சிவகார்த்திகேயனுக்கு இணையான அல்லது அதைவிட அதிகமான சம்பளத்தைக் கேட்கத் தொடங்கியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையிலான தொழில்முறைப் போட்டி தற்போது சூடுபிடித்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News