Sunday, April 12, 2026

கங்குவா தோல்விக்கு பின் அஜித்தை நாடும் சிறுத்தை சிவா – ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!!

கோலிவுட்டின் வெற்றிக் கூட்டணியான நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய நான்கு சூப்பர் ஹிட் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, சிவாவின் திரைப்பயணத்தில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், அதன் பிறகு அவர் இயக்கிய ‘அண்ணாத்தே’ மற்றும் ‘கங்குவா’ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில், தனது அடுத்த இன்னிங்ஸை மீண்டும் அஜித்துடனேயே தொடங்க சிவா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், அஜித்துடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளார்.”அனைத்தும் சரியாக அமைந்தால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படம் எந்த வகையான கதைக்களம் (Genre) என்பது தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர் தோல்விகளுக்குப் பிறகு, அஜித்துடனான இந்தக் கூட்டணி சிவாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் ரசிகர்கள் இந்த ‘AK 64’ கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News