ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி வகிக்கும் சாம்சங் நிறுவனம் எடுத்துள்ள புதிய முடிவால், பட்ஜெட் மற்றும் நடுத்தர விலை (Mid-range) மொபைல் போன்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் துறை சார்ந்த நிபுணர்கள் கணித்துள்ளனர். இதுவரை குறைந்த விலையில் கிடைக்கும் மொபைல்களில் பயன்படுத்தப்பட்டு வந்த குறைந்த வேகமுடைய LPDDR4 மற்றும் LPDDR4X வகை RAM உற்பத்தியை இந்த ஆண்டுடன் நிறுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதற்குப் பதிலாக, அதிவேகச் செயல்பாடுகளைக் கொண்ட LPDDR5 வகை RAM உற்பத்தியை மேலும் அதிகரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பழைய தொழில்நுட்ப உற்பத்தி நிறுத்தப்படுவதால், நடுத்தர விலை போன்களிலும் விலை உயர்ந்த LPDDR5 RAM-களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும். இதன் நேரடி விளைவாக, சந்தையில் கிடைக்கும் மலிவு விலை மொபைல்களின் விலையும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.தொழில்நுட்ப ரீதியாக மொபைல்களின் வேகம் அதிகரித்தாலும், சாமானிய மக்களின் பட்ஜெட்டில் இது ஒரு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 22, 2026 தேதியிட்ட இந்த அறிவிப்பு, மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் LPDDR5 தொழில்நுட்பமே சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் என்பதால், மொபைல் போன்களின் அடிப்படை விலைக் கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் நிகழக்கூடும்…

