Tuesday, June 2, 2026

இந்தியா – தென்கொரியா இடையே 15-க்கும் மேற்பட்ட புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

இந்தியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், 15-க்கும் மேற்பட்ட முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.குறிப்பாக கப்பல் கட்டுமானம், எரிசக்தி பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தங்களின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இந்தியாவின் எதிர்காலத் தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.மேலும், தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் விளையாட்டுத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்கவும் ,

இரு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர். ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் பொருளாதார சூழலில், இந்தத் தூதரக சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏப்ரல் 20, 2026 அன்று நடைபெற்ற இந்த சந்திப்பானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்பு மற்றும் கூட்டுறவில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News