Tuesday, April 14, 2026

பஞ்சு போன்ற பாதங்கள் வேண்டுமா..?? வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிள் டிப்ஸ் உள்ளே ..!!

கோடைக்காலம் மற்றும் அன்றாட வேலைகளால் ஏற்படும் பாத வெடிப்புகள் மற்றும் இறந்த செல்களை நீக்கி, பாதங்களை மென்மையாக்க வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பராமரிக்க முடியும். இதற்காக ஒரு வாளியில் 4 கப் வெந்நீர் மற்றும் ஒரு கப் காய்ச்சிய பாலைக் கலந்து, அதனுடன் இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு கப் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.இந்தக் கலவையில் உங்கள் பாதங்களை 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைப்பதன் மூலம், பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக்கி இறந்த செல்களைத் தளர்த்துகிறது.

ஊறவைத்த பிறகு, ஒரு படிகக்கல்லை (Pumice Stone) கொண்டு குதிகால் பகுதியை மென்மையாகத் தேய்த்தால் கடினமான தோல்கள் எளிதில் நீங்கிவிடும்.தேன் பாதங்களுக்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதுடன், ரோஸ் வாட்டர் பாதங்களில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. இந்தப் பராமரிப்பு முறைக்குப் பிறகு, பாதங்களைச் சுத்தமான துணியால் துடைத்துவிட்டு,

தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசிங் கிரீம் தடவுவது நீண்ட நேர மென்மையைத் தரும். வெளியூர் சிகிச்சைகளை விட இயற்கை முறையிலான இந்தப் பராமரிப்பு, பாதங்களை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றும் என அழகு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News