Thursday, July 16, 2026

நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது..!! ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் வழங்கினார்..!!

இந்திய திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பால் தனக்கென தனி முத்திரை பதித்த முன்னணி நடிகர் மாதவனுக்கு, நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கலை மற்றும் திரையுலக பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற மிக பிரம்மாண்டமான பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் பங்கேற்று,

நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருதினை நேரில் வழங்கி சிறப்பித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் போது ராணுவ அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உடனிருந்தனர்.தமிழ், இந்தி என பன்மொழிகளில் நடித்து முத்திரை பதித்த மாதவன், சமீப காலமாக மாறுபட்ட கதாபாத்திரங்களையும், தரமான கதைகளையும் தேர்ந்தெடுத்து இயக்கி, நடித்து வருகிறார்.

ஜனாதிபதியிடம் இருந்து அவர் இந்த உயரிய விருதைப் பெறும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவருக்குத் திரை உலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News