Thursday, July 16, 2026

முட்டை விலை மீண்டும் உயர்வு..!! பண்ணை கொள்முதல் விலை புதிய உச்சம்..!!

முட்டை உற்பத்தியின் முக்கிய மையமாகத் திகழும் நாமக்கல் மண்டலத்தில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த அதிரடி விலை உயர்வைத் தொடர்ந்து, நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது ரூ.6.60 ஆக அதிகாரப்பூர்வமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாகவே முட்டையின் தேவை சந்தைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

முக்கியமாக, பிற மாநிலங்களில் இருந்து வரும் முட்டைகளுக்கான தேவையும், தமிழகத்தின் உள்ளூர் சந்தைகளில் ஏற்பட்டுள்ள வரத்து மாற்றங்களும் இந்த விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.பண்ணை கொள்முதல் விலையிலேயே ஒரு முட்டை ரூ.6.60 ஆக உயர்ந்துள்ளதால், வெளிச்சந்தைகளில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் இதன் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இதன் காரணமாக, பொதுமக்கள் அன்றாடம் வாங்கும் சில்லறை விற்பனை விலையில் ஒரு முட்டையின் விலை 7 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.விலை உயர்வு ஒருபுறம் சாமானிய நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர உணவு பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தினாலும், பண்ணையாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் இந்த விலை உயர்வால் ஓரளவுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News