Friday, July 17, 2026

நாளை கனமழை எச்சரிக்கை..!! 6 மாவட்டங்களுக்கு வானிலை மையம் முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நாளை (ஜூன் 27) வடதமிழகத்தின் சில மாவட்டங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களில் நாளை மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நீடித்து வந்த நிலையில், இந்த திடீர் மழை அறிவிப்பு பொதுமக்களுக்குக் குளிர்ச்சியான ஆறுதலைத் தந்தாலும், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றும், இடியும் வீசக்கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது கவனமாக இருக்குமாறும், நீர்நிலைப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News