Friday, July 17, 2026

‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளருக்கு புதிய பொறுப்பு – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், டெல்லியில் தமிழக அரசு சார்ந்த பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் ஏதுவாக, டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி மிக முக்கியப் பங்கினை வகிக்கிறது. இச்சூழலில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ புதிய டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகப் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் தேவேந்து நாராயணா அவர்கள் தற்போது முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்க உள்ள தேவேந்து நாராயணா அவர்கள், திரையுலகில் மிகவும் பிரபலமான, அரசியல் மற்றும் சமூகப் பின்னணி கொண்ட திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசிடம் இருந்து மாநில அரசிற்கு வரவேண்டிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் சார்ந்த நிர்வாகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை மத்திய அரசுடன் இணக்கமாகப் பேசிப் பெற்றுத் தருவதில் இந்த சிறப்புப் பிரதிநிதி பொறுப்பு முக்கியப் பங்காற்ற உள்ளது. நிர்வாகத் திறனும், பரந்த ஆளுமையும் கொண்ட தேவேந்து நாராயணா அவர்களின்,

இந்த புதிய நியமனம், டெல்லி மற்றும் சென்னை அரசியல் வட்டாரங்களில் மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இவருக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலகைச் சார்ந்த பிரமுகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News