Saturday, July 18, 2026

ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு..!! புதுமையான தங்க மோதிர திட்டத்தை அறிவித்த முதல்வர் விஜய்..!!

தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மற்றும் புதிய திட்டங்கள் குறித்த விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஏழை எளிய குடும்பங்களின் மகிழ்ச்சியைத் தூண்டும் வகையிலான மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் விஜய் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.பொதுமக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்திற்கு “முதல்வரின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய மக்கள் நலத்திட்டத்தை மாநிலம் முழுவதும் தொய்வின்றிச் செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக நடப்பு நிதியாண்டில் ரூ.755 கோடி நிதியை அரசு அதிரடியாக ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தவெக அரசின் சார்பில் 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பிறப்பை உன்னதமாக்கும் வகையிலும்,

ஏழைக் குடும்பங்களுக்கு அரசின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த அதிரடி மற்றும் பாசமிகு அறிவிப்பு, தமிழக மக்களிடையே குறிப்பாகப் பெண்களிடையே மிகப்பெரிய நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது…

Related Articles

Stay Connected

0FansLike

Latest News